சென்னைல ஒரு ஐந்து வருடம் வேலை செய்துவிட்டு சிங்கப்பூர் வந்த புதிது… (நம்ம ஊருல நடந்த கதையே நிறைய இருக்கு ஆனாலும் இத முதல்ல சொல்ல ஆசைப்பட்டதற்கு காரணம் சிங்கப்பூரில் இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவில்லை என்பதே) தொட்டதெற்கெல்லாம் ஃபைன், ரூல்ஸ்னு கூட வேலை பார்த்த பசங்களே மிரட்டி வச்சுருந்தாங்க. எங்க கம்பெனி கான்டோல (Condo) ஒரு யூனிட்ட வாடகைக்கு எடுத்து பேச்சுலர் பசங்களுக்கு ஆளுக்கு ஒரு ரூமா குடுத்திருந்தாங்க.
அந்த கான்டோல ஜிம், நீச்சல்குளம், ஜக்குஸி, டென்னிஸ், ஸ்குவாஷ், சானா, ஸ்டீம் ரூம்னு எல்லா வசதியும் இருந்துச்சு. எனக்கு இது எல்லாமே புதுசு. ஊருல நீச்சல் ஜிம்னு போயிருந்தாலும் அங்க இருக்ற வசதிக்கும் இங்க இருக்குற வசதிக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. அதுனால சனி ஞாயிறானா போதும் ஒவ்வொண்ணா போய் கிளப் ஹவுஸ்லயே பழியா கிடப்பேன். “cut the crap…come to the subject” னு சொல்றது கேக்குது.
சம்பவம் நடந்த அன்னைக்கு சோன்னு மழை பெய்து கொண்டிருந்தது நான் ஜிம்ல சைக்ளிங் பண்ணிக்கிட்டு இருந்தேன், அப்ப சைனீஸ் புத்தாண்டு விடுமுறைவேற, கான்டோவே காலியா இருந்த மாதிரி வெறிச்சோடி இருந்த சமயம்.